Home FeedBack About us Contact us
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள்

இரண்டு கிராமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விருது பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி என்றார்.

1967ல் சென்னையில் பிறந்த ஏ.ஆர்.ரஹ்மான், மலையாள திரைப்பட இசையமைப்பாளர் சேகரின் மகனாவார். சிறு வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தொடக்கத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டோரின் இசைக் குழுக்களில் பணிபுரிந்தார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "ரோஜா" " திரைப்படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.
" "மின்சார கனவு," " " "லகான்" " (ஹிந்தி), " "கன்னத்தில் முத்தமிட்டால்" " படங்களுக்காக தேசிய விருதுகளை இவர் பெற்றார்.

டேனி பாயல் இயக்கத்தில் இந்தியாவில் உருவான "ஸ்லம்டாக் மில்லினர்" " என்ற ஆங்கிலப் படத்துக்காக 2008ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளைப் பெற்றார். அதே படத்துக்காக சிறந்த இசை மற்றும் பாடல் பிரிவுகளில் இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார்.
இதைத் தவிர மோரீஷஸ் நாட்டின் கௌரவ விருது, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை ஃபிலிம் பேர் விருது, 12 முறை ஃபிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன் போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, மலேசிய அரசின் விருது, ஆலிவர் விருது, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளுடன் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் பெற்ற பின்னர், கிராமி விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்த ரஹ்மானுக்கு ஆஸ்கரைப் போலவே, இப்போது இரண்டு கிராமி விருதுகள் கிடைத்துள்ளன.

"இசைத்துறையின் விருதுகளுக்கெல்லாம் தந்தை" " போன்ற கிராமி விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. விருதுகள் நல்லதுதான். ஆனால் அவற்றை எதிர்பார்த்து நான் பணிபுரிவதில்லை.
கிராமி விருது கிடைக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் எனது சூஃபி குரு அமீன் பீருல்லா மாலிக், "ஸ்லம்டாக் மில்லினர்" " படத்தின் இயக்குநர் டேன் பாய்ல், ஃபாக்ஸ் தயாரிப்பு நிறுவனம், எனது நண்பரும் சவுண்டு என்ஜினீயருமான மறைந்த ஸ்ரீதர், என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம், என்னுடைய ஏஜெண்டுகள் சேம் ஸக்வர்ட்ஸ், அமோஸ் நியூமேன், ஹிந்திப் படவுலகைச் சேர்ந்த சேகர் கபூர், சுபாஷ் கய், எனது இசைக் குழுவின் திறமையான கலைஞர்கள், எனது தாய், தந்தை, சகோதரிகள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் தொடர்ந்து என்னுடைய பணியை அமைதியாகச் செய்வேன். கடவுள் பெரியவர்...  இந்திய இளைஞர்களே! நாம் இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ளோம். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" "" " என்றார் ரஹ்மான்.

More News

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எதிர்ப்பு?
எவரெஸ்ட் மலைப்பகுதியில் அக்னி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கியது. விமானத்தில் இருந்த 14 பேரும் பலி!
போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் நடிகை திரிஷாவின் செல்போன் நம்பர்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு நன்னடத்தை விதிமுறைகள்
பீர் குடிக்கும் பெண்கள் சோரியாசிஸ் என்ற கொடிய தோல்நோயினால் பாதிக்கப்படுகின்றனர் - உலக சுகாதார நிறுவனம்
ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி, பதக்கங்கள் பறிக்கப்படுவதாக ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது
இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு - உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்!
எந்திரன் வெளியாவதால் தள்ளி வைக்கப்பட்ட வ.ஐ.ச.ஜெயபாலன் நடித்த ஆடுகளம்.
நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று - இயக்குநர் கே.பாலச்சந்தர்.
மந்தமான வானிலை காரணமாக பாகிஸ்தான் விமானம் விபத்தில் சிக்கியது. 155 பேர் பலி

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai