Home FeedBack About us Contact us
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சிறப்பாக ஆடும்: கேப்டன் டோனி நம்பிக்கை!

3-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி அடையார் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் இன்று நடந்தது.
 
கேப்டன் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தேர்வாளர் வி.பி.சந்திரசேகர், குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
பின்னர் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
முதலாவது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது இடத்தை பிடித்தது. கடந்த முறை அரை இறுதி வரை சென்றோம்.
 
இப்போது நடைபெற இருக்கும் 3-வது போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம். கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவோம்.
 
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக எதையும் சொல்லமுடியாது. 15, 20 நிமிடங்களில் ஆட்டத்தின் தன்மையே மாறிவிடும். எங்கள் அணியில் பந்தவீச்சில் பலவீனம் இல்லை.
 
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் கெம்ப் எங்கள் அணியில் உள்ளார். அவர் சிறந்த ஆல்ரவுண்டர். அதிகமான பவுலர்களுடன் ஆடுவது அணிக்கு நல்லது. எங்கள் அணியின் பலமே பேட்டிங்தான். ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி ஏப்ரல் மாதத்தில் அணியில் இணைவார். இது எங்களுக்கு கூடுதல் பலமாக அமையும்.
 
போட்டிகள் வெவ்வேறு இடங்களில் 45 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு இடமாக வீரர்கள் செல்வது சிரமம்தான். ஆனால் அதை தடுக்க முடியாது. ஐ.பி.எல். போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஐ.பி.எல். போட்டி இளம் இந்திய வீரர்களை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இதனால் ஒரு அணிக்கு 4 சர்வதேச வீரர்களை மட்டும் விளையாட அனுமதிப்பது சரிதான். அதற்குமேல் தேவை இல்லை.
 
இவ்வாறு டோனி கூறினார்.
 
அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சென்னை சூப்பர்கிங்ஸ் பலம் வாய்ந்தது. இந்தியா, தென்ஆப்பிரிக்க வீரர்கள் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஹைடன், முரளீதரனின் வலிமை வாய்ந்த கூட்டணியாகும்.
 
ஐ.பி.எல். முதல் போட்டியில் நான் விளையாடினேன். 2-வது போட்டியில் பயிற்சியாளர் ஆனேன். இது எனக்கு புதிய சவாலாகும்.
 
அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறேன். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிறப்பாக விளையாடும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அணி தேர்வாளர் வி.பி.சந்திரசேகர் கூறும்போது, எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால் நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார்.
 
காயம் காரணமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஜஸ்டின் கெம்ப் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் ஆடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வருகிற 14-ந்தேதி இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
 
ஐ.பி.எல். போட்டிக்கான சூப்பர்கிங்ஸ் வீரர்களின் பயிற்சி முகாம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும். வருகிற 13-ந்தேதி வரை பயிற்சி நடைபெறும்.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss