Home FeedBack About us Contact us
வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி!

வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. "டாஸ்" " வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிறிஸ் கெய்ல், பீல்டிங் தேர்வு செய்தார்.

வாட்சன் அபாரம்:
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின், துவக்க வீரர் மார்ஷ் (20) நிலைக்கவில்லை. பின் வாட்சனுடன் இணைந்தார் கேப்டன் பாண்டிங். அபாரமாக ஆடிய வாட்சன் (59) அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பாண்டிங், 49 ரன்களுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த கிளார்க் (18), ஒயிட் (22) விரைவில் திரும்பினர். மைக்கேல் ஹசி (28), ஜான்சன் (21) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. போலார்டு, 3 விக்கெட் வீழ்த்தினார்.

வெ.இண்டீஸ் தோல்வி:
எட்டிவிடும் இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கேப்டன் கெய்ல் (7), மோர்டான் (3) ஏமாற்றினர். டவ்லின் (1), தியோநரைன் (19) இருவரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ராம்தின் (17) ஹாரிஸ் வேகத்தில் போல்டானார். போலார்டு மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பின் வந்த வீரர்கள் வரிசையாக ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய "ஆல்-ரவுண்டர்" " வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி, முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai