Home FeedBack About us Contact us
ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்காவின் ஹாசிம் ஆம்லா இரட்டைச் சதம் அடித்து தூள் கிளப்பினார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 558 ரன்கள் குவித்து "டிக்ளேர்" " செய்தது. முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து இருந்தது. காலிஸ் (159), ஆம்லா (115) இருவரும் அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து காலிஸ், ஆம்லா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 340 ரன்கள் சேர்த்த நிலையில், 173 ரன்கள் எடுத்திருந்த காலிஸ், ஹர்பஜன் பந்தில், முரளி விஜயிடம் "கேட்ச்" " கொடுத்து அவுட்டானார்.

பின் ஆம்லா, டிவிலியர்ஸ் இணைந்து அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தனர். டிவிலியர்ஸ், சர்வதேச அரங்கில் 21வது அரைசதம் கடந்தார். இவர்களை பிரிக்க தோனி எடுத்த, பல முயற்சிகளும் வீணானது. இறுதியில் சேவக்கை பந்து வீச அழைத்தார் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், டிவிலியர்ஸ் (53), சேவக் சுழலில் வீழ்ந்தார்.

ஆம்லா இரட்டை சதம்:
மறுமுனையில் ஆம்லா உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாளில் இரண்டுமுறை அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிய ஆம்லா, நேற்றும், 149 ரன்கள் எடுத்திருந்த போது, இருமுறை தப்பிப்பிழைத்தார். தொடர்ந்து அசத்திய இவர், சேவக் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் கடந்தார். இவருடன் இணைந்த டுமினி (9), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். பவுச்சர் (39), ஜாகிர் கான் வேகத்தில் பலியானார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்திருந்த போது, "டிக்ளேர்" " செய்வதாக அறிவித்தது. ஆம்லா (253, 22 பவுண்டரி), ஸ்டைன் ரன் எதுவும் இன்றி, ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான் 3, ஹர்பஜன் 2, சேவக் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிரடி துவக்கம்:
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி வழக்கம் போல அதிரடி துவக்கம் கொடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 4 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து, 533 ரன்கள் பின்தங்கி இருந்தது. சேவக் (9), காம்பிர் (12) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

லாங்வெல்ட்டுக்கு வாய்ப்பு
டெஸ்ட் தொடருக்கு பின், இந்தியா--தென் ஆப்ரிக்க அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. இதற்கான தென் ஆப்ரிக்கா அணியில் லாங்வெல்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜெரால்டு மஜோலா கூறுகையில்,"" விரைவில் "டுவென்டி-20" " <உலக கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிகள் வரவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க, லாங்வேல்ட்டுக்கும் வாய்ப்பு அளித்துள்ளோம்," "" " என்றார்.

அதிர்ஷ்டக்காரர்:
தென் ஆப்ரிக்க அணியின் ஆம்லா, முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு இந்திய அணியின் பீல்டிங்கும் ஒரு காரணம். முதல் நாளில் இவர், 61 ரன்கள் எடுத்திருந்த போது, ஜாகிர் கான் பந்தில் கொடுத்த வாய்ப்பை, தோனி மற்றும் முரளி விஜய் தவறவிட்டனர். பின் 82 ரன்களில் இருந்த போது பத்ரிநாத் வாய்ப்பை தவறவிட்டார். நேற்றும், 149 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்பஜனின் அடுத்தடுத்த பந்தில், ஆம்லா கொடுத்த "கேட்ச்" " வாய்ப்பை தோனி மற்றும் முரளி விஜய் வீணடித்தனர். இப்படி நான்கு முறை தப்பிப்பிழைத்த இவர், இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

வெற்றிபெற முயற்சிப்போம்:
முதல் டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். இது பேட்ஸ்மேன்கள் கையில் உள்ளது என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
நூறு டெஸ்டில் விளையாடிய அனுபவ வீரர்கள் டிராவிட், லட்சுமண் இல்லை என்பது தெரியும். இருப்பினும் முரளி விஜய் மற்றும் பத்ரிநாத் இருவரும் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நன்கு பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். அமித் மிஸ்ரா, விக்கெட் எதுவும் வீழ்த்தாத போதும், என்னைப் பொறுத்தவரையில் அபாரமாக செயல்பட்டார். அதுபோல ஹர்பஜனும் அசத்தினார். கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்தாவது பவுலர் இல்லாமலேயே சாதித்துள்ளோம். இதைத் தொடருவோம்.
எப்படியும் போட்டியில் வெல்வதற்கு தேவையான அளவில், சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இதற்கு அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்துவது முக்கியம். ஒருசில வீரர்கள் அதிக ரன்களை குவிக்க வேண்டும். இதற்கான திறமை எங்களிடம் உள்ளது.
இவ்வாறு கிறிஸ்டன் கூறினார்.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai