இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று நாக்பூரில் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித் மற்றும் பிரின்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்மித் 6 ரன்கள் எடுத்த நிலையிலும், பிரின்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும், ஜாகிர் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.
இருப்பினும் பின்னர் இணைந்த அமலாவும், கல்லிஸும் நிலைத்து நின்று விட்டனர். இருவரும் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் ஆளுக்கு ஒரு சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவின் நிலையை ஸ்திரப்படுத்தியுள்ளனர்.
கலிஸ் முதலில் சதம் போட்டார். 146 ரன்களுடன் அவர் ஆடிக் கொண்டிருக்கிறார். சற்று முன்பு சதம் போட்ட அமலாவும், 102 ரன்களுடன் ஆடி வருகிறார். தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. இன்று ஆட்டத்தின் இரண்டாவது நாளாகும்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








