Home FeedBack About us Contact us
டெஸ்ட் போட்டியில் விளையாட ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இளம் வீரர் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

விவிஎஸ் லட்சுமணன் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அவருக்குப் பதிலாக ரோஹித்தை டெஸ்ட் அணியில் சேர்த்துக் கொள்ள கிரிக்கெட் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

டெஸ்ட் வீரர்கள் உத்தேசப் பட்டியலில் இடம் பிடித்துள்ள விவிஎஸ் லட்சுமணன் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமாகவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய பிரசிடென்ட் லெவன் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். ரஞ்சி டிராபியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக அவர் கடந்த 2008-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தன்னை நாகபுரியிலேயே தங்கியிருக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதாக ரோஹித், வியாழக்கிழமை கூறியுள்ளார்.

காயம் காரணமாக ராகுல் திராவிட், யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இப்போது விவிஎஸ் லட்சுமணனும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். கடந்த மாதம் சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லட்சுமணன் காயமடைந்தார்.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai