இந்திய அணியை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்போம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாகபுரியில் சனிக்கிழமை தொடங்குகிறது. நாகபுரி வந்துள்ள இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியது:
இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இதன் மூலமே அந்த அணியின் பலத்தை நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம். எனினும் இந்திய அணியை விட சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்திய அணியை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து திட்டமிட்டு வைத்துள்ளோம். இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்போம்.
சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றுவது என்பது சவாலான விஷயம்தான். இந்திய அணியில் வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் எங்கள் அணியும் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு வந்துள்ளோம். முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது. ஏனெனில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 120 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. இதில் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று மற்றொன்றை டிரா செய்தால் கூட இந்திய அணி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படும். இதுதவிர சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் இந்திய அணியில் கெüதம் கம்பீர் முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக கிரேம் ஸ்மித் உள்ளார். எனவே தனிப்பட்ட முறையிலும் இந்த இரு வீரர்களுக்கும் இந்த தொடர் சவாலானதாகவே இருக்கும்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








