Home FeedBack About us Contact us
அப்ரிதியின் செய்கை, நாட்டுக்கு அவமானம் - முகமது யூசுப்!.

அப்ரிதியின் செய்கையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும், நாட்டுக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளதாக கேப்டன் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: அப்ரிதி ஏன் இதுபோன்ற செய்கையில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரது நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் நாட்டுக்கும் கெட்ட பெயரை வாங்கித் தந்துள்ளது. தனது தவறை அவர் ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது. இனி இதுபோன்ற சம்பவங்கள் எப்போது நடக்கக் கூடாது.

ஆஸ்திரேலியா போன்ற பலமான அணியை அந்த நாட்டில் எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம். அதிலும் கேப்டனாக இருப்பது மிகப்பெரிய சவால். ஆஸ்திரேலியப் பயணம் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் கடினமாகவே அமைந்தது. எனக்கு அளிக்கப்பட்ட பணியை திருப்திகரமாகவே செய்தேன் என்றார் முகமது யூசுப்.

ஆஸ்திரேலியத் தொடரில் பாகிஸ்தான் மோசமாக தோல்வியடைந்ததால் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுவது குறித்த கேள்விக்கு, நான் கேப்டன் பொறுப்பில் இருக்கவே விரும்புகிறேன். கேப்டன் பொறுப்பிலிருந்து விலக மாட்டேன் என்று யூசுப் பதிலளித்தார்.

முன்னதாக பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தாற்காலிக கேப்டனாக இருந்த அப்ரிதி பந்தை வாயில் வைத்து கடித்து சேதப்படுத்தினார். இதனையடுத்து அவருக்கு இரண்டு 20-20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

அப்ரிதியின் நடவடிக்கை சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்கள் பலரும் அவருடைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் இம்ரான் கான், ரமீஸ் ராஜா ஆகியோர் அப்ரிதிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai