Home FeedBack About us Contact us
துபாயின் மிகப்பெரிய மீன் கண்காட்சி மூடல்

துபாயில் கடலுக்கு அடியில் சென்று பார்ப்பது போன்ற  மிகப்பெரிய மீன் கண்காட்சியில்,  கண்ணாடி உடைந்ததால் வர்த்தக வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. பாலைவன நகரமான துபாய், சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. ஏராளமான நட்சத்திர ஓட்டல்களும், பொழுது போக்கு பூங்காக்களும், சர்வதேச வர்த்தக சந்தைகளும் இங்கு உள்ளன.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக வளாகம் துபாயில் உள்ளது. இந்த வர்த்தக வளாகத்தில் சுறா மற்றும் குட்டி திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் கொண்ட பெரிய மீன் கண்காட்சியகம் உள்ளது.  இந்த மீன் கண்காட்சிக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கடலுக்குள் சென்று உயிரினங்களை பார்ப்பது போன்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.  முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மீன்கள் உலா வந்து கொண்டிருக்க குகை போன்ற பாதையில் நடந்து சென்று சுற்றிலும் உலாவும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கும் வகையில், இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரிய கண்காட்சியில், தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடியில்  சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், பார்வையாளர்கள் சென்று பார்க்க முடியாத அளவுக்கு தண்ணீர் கொட்டியது.  இதையடுத்து, இந்த வணிக வளாகம் மூடப்பட்டு, மீன் கண்காட்சியகத்தை செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளாகம் மூடப்பட்டதால், எவ்வளவு இழப்பு ஏற்பட்டது, என்பது குறிப்பிடப்படவில்லை. 2.5 அடி கனமுள்ள கண்ணாடியில்  விரிசல் ஏற்பட்டுள்ளதால், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை, என வணிக வளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News

இந்தியாவில் டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பலி!
பைலட்டுகள் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
பட்டதாரிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிட்டன்
சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss