"அமெரிக்காவின் குடியேற்ற நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது," "" " என, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கூறியதாவது:
அதிபர் ஆசிப் அலி சர்தாரி, நாட்டில் அமெரிக்க கொள்கைகளை செயல்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் இதே நடைமுறை தொடர்கிறது. இதன்மூலம், பாகிஸ்தான், அமெரிக்காவின் குடியேற்ற நாடாக மாறி வருகிறது. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தானை இஸ்லாம் நலம் பேணும் நாடாக மாற்றுவோம். இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், தற்போது வெளிநாட்டில் வசிப்பவருமான முஷாரப், மீண்டும் நாடு திரும்ப போவதாக வெளியான தகவலை, அவரது ஆதரவாளர் மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முஷாரப்புக்கு நெருக்கமானவருமான தாரிக் அஜிஸ் கூறுகையில், "தற்போதுள்ள சூழ்நிலையில் முஷாரப் கண்டிப்பாக நாடு திரும்ப மாட்டார். அவர் அரசியல் கட்சியை துவக்கப்போவதாக வெளியான தகவலும் உண்மை அல்ல," "" " என்றார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








