Home FeedBack About us Contact us
மாணவர் விசா - விதிமுறைகளை பிரிட்டன் கடுமையாக்கியது

மாணவர் விசா வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற பிரிட்டன் முடிவெடுத்துள்ளது.

பிரிட்டனில் வெளி நாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படும் மாணவர் விசாவை பலர் தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் கள் எழுந்தன. இந்நிலையில், மாணவர் விசா வழங்குவதில் பல புதிய கெடுபிடிகளை விதிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஆலன் ஜான்சன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" "பிரிட்டனில் கல்வி கற்க விரும்பும் உண்மையான வெளிநாட்டு மாணவர்களை நாங்கள் அன்புடன் வரவேற்று வருறோம். இனிமேலும் வரவேற்போம்.

ஆனால், மாணவர் விசாக்களை பயன்படுத்தி வேலைக்காக பிரிட்டனுக்கு வருபவர்களின், சட்டவிதிமுறைகளை மீறிய, எங்கள் அமைப்பை குலைக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது.

எனவே புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம். இதன்படி, ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும்.

பட்டப்படிப்புக்கு கீழுள்ள படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 20 மணி நேரமாக இது உள்ளது.

ஆறு மாதத்துக்கும் குறைவான பயிற்சி காலத்தை கொண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேபோல், பட்டப் படிப்புக்குக் கீழுள்ளவற்றை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுடன் வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பட்டப் படிப்புத் தரத்துக்கு கீழ் உள்ள படிப்புகளை நடத்தும் நிறுவனங்கள், தற்போது அரசால் திருத்தப்பட்டுள்ள நிறுவனப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய விதியும் பின்பற்றப்பட உள்ளது" " எனக் கூறப்பட்டுள்ளது.

More News

சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"
400 ஆண்டுகளுக்கு பிறகு குமுறத் தொடங்கிய சினாபுங் எரிமலை
கூர்க்கா படைப் பிரிவை கலைக்க இங்கிலாந்து முடிவு
பெண் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ தளபதியின் பதவி காலம் 6 ஆண்டு குறைப்பு!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai