Home FeedBack About us Contact us
இணையத் தளத்தை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தல்!

பிரிட்டன் நாட்டு சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர், போதைப் பொருள் கடத்தல் உட்பட தன் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் எதிரிகளை அச்சுறுத்தல் போன்றவற்றிற்கு பேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.இதுகுறித்து, பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி:பிரிட்டன் நாட்டை சேர்ந்த மிகப் பெரிய தாதா, காலின் கன். இவர், கொலை குற்றத்திற்காக, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது, பிரிட்டன் சிறையில் உள்ளார்.

எனினும், அவர், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை சிறையில் இருந்தே, இன்னும் வழிநடத்தி வருகிறார். இதற்கு அவர், பேஸ்புக் எனும் சமூக இணையதளத்தை பயன்படுத்துகிறார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த இணையதளம் மூலம் அவர், சர்வசாதாரணமாக, தன் நண்பர்களை தொடர்பு கொள்கிறார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காலின் கன் கூறுகையில், "பேஸ்புக்கில், புதிய கணக்கு தொடங்க, சிறைத் துறை அதிகாரிகள் எனக்கு அனுமதி வழங்கினர். ஏனென்றால், அது என் அடிப்படை உரிமை" என்றார்.எனினும், அவரது பேஸ்புக் கணக்குகள் கடந்த சனிக்கிழமை முதல் முடக்கப்பட்டது.

இதுகுறித்து, நீதித்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது: சிறையில் இருக்கும் கைதிகள், சமூக இணையதளங்களை சட்டவிரோத தொழில் நுட்பங்கள் மூலம் தவறாக பயன்படுத்துவது கவலையளிப்பதாக உள்ளது. கல்வி சார்பான பயன்பாட்டை தவிர பிறவற்றிற்கு இணையதளங்களை பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் கைதிகளின், இணையதள பயன்பாட்டை, பணியாளர்கள் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு காலின் கன் கூறினார்.

More News

சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"
400 ஆண்டுகளுக்கு பிறகு குமுறத் தொடங்கிய சினாபுங் எரிமலை
கூர்க்கா படைப் பிரிவை கலைக்க இங்கிலாந்து முடிவு
பெண் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ தளபதியின் பதவி காலம் 6 ஆண்டு குறைப்பு!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai