செய்திகள் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க இளைஞர்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் இன்டர்நெட் மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறது.
அமெரிக்காவில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. தினசரி செய்திகள் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க இளைஞர்கள் எந்தெந்த ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் ஆய்வின் நோக்கம்.
இந்த ஆய்வு மொத்தம் இரண்டாயிரத்து 259 இளைஞர்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள விவரங்கள்:மொத்தம் 78 சதவீதம் பேர், உள்ளூர் "டிவி" " நிலையங்கள் மூலம் செய்திகள் தெரிந்து கொள்கின்றனர். 73 சதவீதம் பேர், தேசிய "டிவி" "க்களான சி.பி.எஸ்., போன்ற "டிவி" "க்கள் மூலமோ அல்லது கேபிள் "டிவி" "க்களான சி.என்.என்., போன்ற "டிவி" "க்கள் மூலமோ செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர்.இணையதளங்கள் மூலமாக, 61 சதவீதம் பேர் செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர்.
ஏதாவது ஒரே ஒரு இணையதளம் மூலம் மட்டுமே 21 சதவீதம் பேரும், இரண்டு அல்லது ஐந்து இணையதளங்கள் மூலம் 51 சதவீதம் பேரும், ஐந்து இணையதளங்களுக்கு மேல் 11 சதவீதம் பேரும், குறிப்பிட்ட இணையதளம் என்றில்லாமல் எந்த இணையதளத்தின் மூலமாவது 64 சதவீதம் பேரும் செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர்.ரேடியோ மூலம் 54 சதவீதம் பேரும், உள்ளூர் நாளிதழ்கள் மூலம் 50 சதவீதம் பேரும், தேசிய நாளிதழ்களான "தி நியூயார்க் டைம்ஸ்" " அல்லது "யு.எஸ்.ஏ., டுடே" " போன்றவற்றின் மூலம் 17 சதவீதம் பேரும் செய்திகளைத் தெரிந்து கொள்வதாகக் கூறியிருக்கின்றனர்.மொபைல் போன் மூலம் 33 சதவீதம் பேர் செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர். "மொத்தத்தில் ஏதாவது ஒருவகையில் தினசரி செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அமெரிக்க இளைய சமுதாயத்திடம் இருக்கிறது. நேரம் போகாமல் இணையத்தில் தேடுபவர்கள் கிடையாது என்றே சொல்லலாம்" " என்கிறார் இந்த ஆய்வை நடத்திய தனியார் நிறுவனத்தின் இயக்குனர்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








