ஆண்கள் ஜோக்குகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு சற்று நேரம் பிடிக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
அதே சமயம் பெண்கள் எல்லா ஜோக்குகளையும் நன்கு ரசித்து சிரிக்கிறார்கள், ஆண்கள் லேசாகச் சிரித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.
மூளையின் செயல்திறனை ஆராயும் நோக்கில் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.
10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கறுப்பு-வெள்ளையாக வரையப்பட்ட 70 கார்ட்டூன்களை அவர்களிடம் காட்டி, அப்போது அவர்களுடைய மூளையின் செயல்பாட்டையும் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். பெண்கள் ஜோக்குகளைப் புரிந்துகொள்ள தங்களுடைய மொழியறிவுத் திறனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஜோக்குகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கின்றனர். ஜோக்கு சொல்லி முடித்த பிறகே அதன் தன்மை உணர்ந்து சிரிக்கின்றனர். ஆனால் அந்தச் சிரிப்பு முழுமையாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் நினைத்து நினைத்தும் சிரிக்கிறார்கள்.
நாகரிகமான, நாசூக்கான ஜோக்குகளை மட்டுமே பெண்கள் மிகவும் ரசிக்கிறார்கள். ரசக்குறைவான ஜோக்குகளை அவர்கள் ரசிப்பதில்லை. சண்டே டைம்ஸ் இச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








