குழந்தைப் பேறின்மைக்கு இன்று மருத்துவ உலகில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், வீட்டில் உள்ள தூசி தும்புகளும் ஒரு காரணம் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
குழந்தைப் பேறின்மை எதனால் வருகிறது என்பது குறித்து, கலிபோர்னியாவிலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலில் இயங்கி வரும் சர்வதேச ஆராய்ச்சிக் குழு ஒன்று, சில ஆராய்ச்சிகளை செய்து வந்தது. அந்த ஆராய்ச்சியின் முடிவில் கூறப்பட்டிருப்பதாவது:சாதாரணமாக வீடுகளில் வராந்தா மற்றும் பிற அறைகளில் உள்ள தரை விரிப்புகள், எலக்ட்ரானிக் பொருட்கள், சுவர்கள் இவற்றில் தூசி படிந்திருக்கும். நாம் தற்போது பயன்படுத்தும் நவீன எலக்ட்ரானிக் சாதனங்களில் பி.பி.டி.பி.இ., என்ற ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரசாயனம் எலக்ட்ரானிக் பொருட்களைத் தீ விபத்திலிருந்து காப்பதற்காக தயாரிப்பின் போது சேர்க்கப்படுகிறது. இது 1970 ல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த ரசாயனப் பொருள், எலக்ட்ரானிக் பொருட்கள், தரைவிரிப்புகள் இவற்றில் படிந்துள்ள தூசி தும்புகள் மீது படிந்து விடுகிறது. அவற்றை சுத்தப்படுத்துவதில் நீண்ட இடைவெளி விட்டுவிட்டால், இந்தத் தூசி, வீட்டிலிருக்கும் பெண்களின் சுவாசத்தில் கலந்து, கொழுப்பு செல்களில் படிந்து விடுகின்றன.
கொழுப்பு செல்களில் படியும் பி.பி.டி.பி.இ., கருத்தரிக்கும் வேகத்தைத் தடை செய்கிறது. சாதாரணமாக, வீட்டை மிக சுத்தமாக வைத்திருக்கும் பெண்கள் கருத்தரிக்கும் வேகத்தை விட, வீட்டை எப்போதாவது சுத்தம் செய்யும் பெண்களின் கருத்தரிப்பு வேகம் குறைவாகவே இருக்கிறது. அதனால், எப்போதும் வீட்டை தூசி தும்பு சேராமல் சுத்தமாக வைத்திருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.பி.பி.டி.பி.இ., காற்றில் கலப்பதால், உடல்நலத்துக்கு ஏற்படும் கேடுகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் பெரும்பான்மையும் மிருகங்களிடமே நடந்துள்ளது. மனிதர்களிடம் அதுபற்றிக் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








