ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாக இங்கிலாந்து நிபுணர் தெரிவித்துள்ளார்.
லண்டனை சேர்ந்த லாப்பரோ யுனிவர்சிட்டியின் உறக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜிம் ஹார்ன். தூக்கம் குறித்து அவர் கூறியதாவது: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் தூக்கம். சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதுதான் தூக்கத்தின் முக்கிய பணி.
மூளையின் ஒரு பகுதி கார்டெக்ஸ். இது நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகிய பணிகளை செய்கிறது. ஆழ்ந்த தூக்கத்தின்போது, இது வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு பகல் நேர இயக்கத்தை மறுஆய்வு செய்கிறது. எனவேதான், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இரவில் அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது.
பெண்களின் மூளை ஆண்களின் மூளையிலிருந்து மாறுபட்டது. குழந்தைகள், கணவன் என குடும்ப பொறுப்பு மட்டுமல்லாது, அலுவலக பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. எனவே, ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது. சராசரியாக 20 நிமிடமாவது பெண்கள் கூடுதலாக தூங்க வேண்டும்.
நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆண்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுடைய மூளை மிகவும் சோர்வடைகிறது. அவர்களுக்கும் சராசரி ஆண்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்றார்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








