பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். கில்லி, ஆசை படங்களில் இவரது வில்லன் கேரக்டர் பேசப்பட்டது. ஜோதிகாவை வைத்து தயாரித்த மொழி படம் வெற்றிகரமாக ஓடியது. திரிஷாவை மகளாக நடிக்க வைத்து அபியும் நானும் படத்தையும் தயாரித்தார்.
பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சினிமாவில் சாதனைகள் நிகழ்த்தும் பிரகாஷ்ராஜ் சொந்த வாழ்க்கை சிறப்பாக இல்லை. நடிகை லலிதகுமாரிக்கும் பிரகாஷ் ராஜுக்கும் 1994-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
பிரகாஷ்ராஜுக்கும் இந்திப் படங்களில் டான்ஸ்மாஸ்டராக பணியாற்றும் போனிவர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதனால் பிரகாஷ் ராஜுக்கும் லலிதகுமாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதல் இல்லை என்று பிரகாஷ்ராஜ், போனிவர்மா இருவருமே மறுத்து வந்தார்கள்.
இந்த நிலையில் லலிதகுமாரியிடம் விவாகரத்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரகாஷ்ராஜ் வழக்கு தொடர்ந்தார். கணவருடன் சேர்த்து வைக்குமாறு லலிதகுமாரி பதில் மனுதாக்கல் செய்தார். பிறகு இருவரும் முழு சம்மதத்தோடு விவாகரத்து செய்து கொள்வதாக புதிய மனு தாக்கல் செய்தார்கள்.
இதையடுத்து பிரகாஷ் ராஜ், போனிவர்மா காதல் மீண்டும் வலுத்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேர்ந்தே சுற்றுகிறார்களாம். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு போனிவர்மா பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








