Home FeedBack About us Contact us
எதிர்கால வேளாண்மை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மரவளர்ப்புடன் எரிசக்தியை மிச்சப்படுத்தும் விவசாயத்தை இணைத்துப் "பர்மாகல்ச்சர்" "  என்ற ஒரு வேளாண் பண்பாட்டை உருவாக்கிய பில்மோலிசன் செய்த முன்னெச்சரிக்கை இன்று உண்மையாகிவிட்டது. அவர் செய்த முன்னெச்சரிக்கை இதுதான்.

"இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவின் உதவித் திட்டங்களின் ஏமாற்று வேலைகள் வெட்ட வெளிச்சமாகும். இயற்கை விவசாயத்தின் மீது உண்மையான கவனம் திரும்பும். தொழில்மய விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும். பெருகிவரும் சாகுபடிச் செலவைச் சமாளிக்க முடியாது.

தொழில்மய விவசாயத்தில் இடுபொருள் செலவு பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தித் தேவையின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அதாவது என்.பி.கே. என்று சொல்லப்படும் ரசாயன உரங்கள், அழிந்துவரும் புதைவு எரிசக்திகளை வைத்து உற்பத்தியாவதால் பெட்ரோல் விலை உயர்ந்தால் உரவிலையும் உயர்ந்து பட்ஜெட்டின் பெரும்பகுதிச் செலவை உரமானியத்துக்கு மட்டுமே வழங்க வேண்டிவரும்.

இப்படிப்பட்ட உரம், விதைகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் உள்ளன. எவ்வளவு விரைவில் வளரும் நாடுகளின் விவசாயம் பன்னாட்டு முதலாளிகளிலிருந்து மீட்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக வளரும் நாடுகள் நலம் பெறும். வாழ்வியலை மையமிட்ட வேளாண்மையே என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில் அது தற்சார்புள்ளது. அதில் பெட்ரோலிய எரிசக்தி வீணாவது இல்லை......." "" "

அவரின் இந்த முன்னெச்சரிக்கை வாசகங்கள் இன்று உண்மையாகிவிட்டது.

காலநிலைத் தடுமாற்றத்தால் விவசாயம் தடுமாறுகிறது என்று கூறினாலும் சரி; தொழில்மய விவசாயத்தினால் காலநிலைத் தடுமாற்றம் ஏற்படுகிறது என்று கூறினாலும் சரி; காலநிலைத் தடுமாற்றம் அல்லது தட்பவெப்பத் தடுமாற்றம் பசுமையகக் கெட்ட வாயுக்களால் உருவாகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

தொழில் நகரங்கள், கார், லாரி போன்ற போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றால் 70 சதம் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன. தொழில்மய விவசாயத்தின் பங்கு 30 சதம் என்பது ஒரு குறைவான மதிப்பீடுதான். ஏனெனில் ரசாயன உர உற்பத்தி,ரசாயன உரங்களின் போக்குவரத்து எல்லாம் தொழில்துறையின் கெட்ட வாயு வெளியீட்டுக்கான காரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

யூரியா, என்.பி.கே. காம்ப்ளக்ஸ் போன்றவை மண்ணில் இடப்பட்டு வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற கெட்ட வாயு, நவீன கால்நடை - பால் பண்ணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் என்ற கெட்ட வாயு ஆகிய இரண்டும் ஓசோன் படலத்தைத் துளைப்பதில் கார்பன் டை ஆக்சைடைவிட வலிமை வாய்ந்ததாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தட்பவெப்பத் தடுமாற்றத்தை உருவாக்கும் தொழில்மய விவசாயத்தால் உலகளாவிய நிலையில் கோடிக்கணக்கான விவசாயிகளும், தட்பவெப்பத் தடுமாற்றத்திற்குட்பட்ட நிலங்களில் வசிக்கும் 37 கோடி கிராமிய ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

வளரும் நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு ரசாயன உரங்களின் தேவை உயர்ந்து வருகிறது.ரசாயன உரங்கள் பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தியைப் பயன்படுத்தி உற்பத்தியாவதால் எரிசக்தி நெருக்கடியைத் தோற்றுவிக்கும். அத்தோடு ரசாயன உரப்பயன்பாடு இயற்கை வழி விவசாயத்தைவிட மூன்று மடங்கு கெட்ட வாயுக்களை உருவாக்கித் தட்பவெப்பத் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

2030-ஐ நாம் நெருங்கும்போது ரசாயன உர உற்பத்தியை 37 சதம் உயர்த்தும் திட்டம் உள்ளதால் கெட்ட வாயுக்களின் உற்பத்தியும் உயர்ந்து, எரிசக்திச் செலவும் உயர்ந்து நமது கண்களை நாமே குத்திக் கொண்டு குருடர்களாக வாழப் போகிறோம். கெட்ட வாயுக்களின் உற்பத்தியாளரான உர நிறுவனங்களும், விதை நிறுவன பகாசூரர்களும் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயக் கொள்கையை வகுத்து வருகிறார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் உயிர்ச்சூழலுக்கு உலைவைக்கும் ஒரே ரகப் பயிர்ப்பண்பாடு - அதாவது மோனோகல்ச்சர்.

உலகிற்குப் பாதுகாப்பான விவசாயம் பர்மாகல்ச்சரிலும், பல்லுயிர்கல்ச்சர் என்று சொல்லப்படும் பயோடைவர்ஸ் விவசாயத்திலும் உள்ளதை அவர்கள் அறிவார்கள் என்றாலும் விதை நிறுவன - உர நிறுவன பகாசூரர்களுக்கு அவற்றால் சுயலாபம் சிறிதும் இல்லை.

உலகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்புவதில் எல்லா நாடுகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டது ரோடேல் நிறுவனம். இந்நிறுவனம் தத்துவரீதியாக ஒரு மாற்றுத்திட்டத்தை முன்மொழிந்து எவ்வாறு எதிர்கால இடர்களை - தட்பவெப்பத் தடுமாற்றத்துக்குரிய சவாலைச் சந்திப்பது என்பதற்கான சில டிப்ஸ் வழங்கியுள்ளது.

இந்த அரிய யோசனைகளை கடைப்பிடித்தால் நாமும் நமது சந்ததிகளும் பிழைக்கவும் நாடு செழிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

கரியமில வாயுவைப் பிடித்து வைத்துப் பிராணவாயுவாக மாற்றும் உயிர் மண்ணை - அதாவது பல்லுயிரிகளைக் கொண்ட மண்ணை உருவாக்க வேண்டும்.

மண்ணானது நைட்ரஜனைப் பிடித்து வைத்துக் கொண்டு அதேசமயம் நைட்ரிக் ஆக்சைடாக வெளியேற்றாமல் இருக்க பயறுவகைப் பயிர்களான உளுந்து, தட்டைப் பயறு, பாசிப்பயறு, துவரை, அகத்தி,  வேர்க்கடலை, வெந்தயம், தக்காளி, அவரை, மொச்சை போன்றவற்றை பயிரிட வேண்டும். இவ்வகைப் பயிர்களைக் கலப்பாகவோ, பயிர்ச்சுழற்சி முறையிலோ பயிரிடும் பாரம்பர்ய மரபை மீட்டுயிர்த்தால் யூரியா செலவைக் குறைக்கலாம்.

யூரியாவைப் பயன்படுத்தும்போது பயிர் ஏற்காதவை, நைட்ரேட்டாக மாறிக் குடிநீரை விஷமாக்கும் அல்லது நைட்ரிக் ஆவியாகமாறி பிராணனை வாங்கும். அதாவது ஓசோனைக் கிழிக்கும்.

மூன்றாவதாக பெரன்னியல் பயிர்களைச் சாகுபடி செய்வது. பெரன்னியல் என்றால் அதிக வயதுள்ள பயிர்கள். இதனால் கார்பன் மண்ணுக்குள் இருந்து வெளியேறாமல் இருக்கும்.நான்காவதாக, பசுமை அல்லது உயிர் மூடாக்கு. அதாவது ஒரு அறுவடைக்குப் பின் முன்கூட்டியே விதைத்துப் பசுமையாக்கி அடுத்த விதைப்பு வரை நிலத்தைத் தரிசாகப் போடாமல் இருத்தல். பொதுவாக நிலத்தைப் பசுமை மாறாமல் வைத்திருக்க வேண்டும். இதனால் மண்ணில் உள்ள நைட்ரஜனானது, நைட்ரஜன் ஆக்சைடு என்ற கெட்ட வாயுவாக வெளியேறாது.

தட்பவெப்பத் தடுமாற்ற விளைவைக் கருத்தில் கொள்ளாமல் நாம் செய்யும் விவசாயம் நமக்கே ஆபத்தைத் தேடித்தரும். தட்ப வெப்பத் தடுமாற்றத்துக்கு ஏற்ப விவசாயத்தைத் தடுமாறாமல் இட்டுச் செல்வது இயற்கை விவசாயமே.

ஒரு நிலத்தில் ஒரேவகைப் பயிரைச் சாகுபடி செய்யாமல் பலரகப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வகையிலும் பலரகங்கள் உண்டு. கத்தரிக்காய் என்று எடுத்துக் கொண்டால் பி.டி. கத்தரிக்காயை மட்டுமே சாகுபடி செய்தால் குலநாசம் ஏற்படும். மாறாக 50 சென்டு நிலத்தில் கத்தரிக்காய் பயிர் செய்ய விரும்பினால், 10 சென்டு பச்சைக் கத்தரிக்காய், 10 சென்டு வெள்ளைக் கத்தரிக்காய், 10 சென்டு ஊதா கத்தரி 10 சென்டு எண்ணெய்க் கத்தரிக்காய், 10 சென்டு முள்ளுக் கத்தரிக்காய் என்று பிரித்து நடுவதே பயோடைவர்ஸ் விவசாயம்.

இடையிடையே குச்சிப் பந்தலிட்டு புடல், பீர்க்கை என்று நிறைய இடைவெளிவிட்டு சாகுபடி செய்யலாம். ஒரு பக்கம் திரும்பினால் சோளம், ஒரு பக்கம் திரும்பினால் நெல், ஒருபக்கம் திரும்பினால் வாழை, ஒரு பக்கம் தீவனப்புல், தட்டைப் பயறு என்று பல வகைகளிலும் பல ரகங்களைக் கலந்து பயிரிட வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது தட்பவெப்பத் தடுமாற்றத்தைத் தாங்கக்கூடிய வகைகளையும் ரகங்களையும் அறிவது எளிதாகும். ஒரு ரகத்தில் ஏற்படும் நஷ்டத்தை வேறு ரகம் தரும் லாபத்தைக் கொண்டு சமாளிக்கலாம்.

உண்ணும் பயிர்களில் மட்டுமல்ல; கால்நடை வளர்ப்பிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தட்பவெப்பத் தடுமாற்றத்தால் நோய்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆடு மாடுகள், கடல் மட்டம் உயர்வு, தாழ்வு, வெப்பம் போன்ற கடல் சூழலுக்கு ஏற்ப வாழக்கூடிய மீன்வகை இனப்பெருக்கம் என்று மீன், கால்நடைகளிலும் பல்லுயிர்ப் பெருக்கம் விரும்பப்படுகிறது.

தட்பவெப்பத் தடுமாற்றத்தால்,வளரும் நாடுகளில் வாழும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்,ஆதிவாசிகள் அதிக அளவில் உணவு இல்லாமல் மடிவர் என்று ஐ.நா. மதிப்பீடு கூறுகிறது.

தட்பவெப்பத் தடுமாற்றத்தால் அதிகம் தடுமாறக்கூடிய நிலப் பகுதிகளில் வாழும் சுமார் 40 கோடி மக்கள் பல்லுயிர்ப் பெருக்கரீதியான விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்த வாய்ப்புள்ளதாக பல்லுயிர்ப் பெருக்க -உயிர்ச்சுழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More News

இலங்கைத் தமிழர் தொடர்பான ராஜிவ் காந்தியின் செயல் கொள்கை குழப்பமானது, ராஜிவ் கொடூரமாக கொல்லப்பட இதுவே காரணம் - இந்திய அரசின் மூத்த உளவுத்துறை அதிகாரி பி.ராமன்
அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளும் தீர்வுகளும்
தாய்மொழியை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.
எதிர்கால வேளாண்மை
ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்த மருந்துக்கு உள்ளது
உழைப்புப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவி!
"பவர் பிளே" அதிரடி!
டிவி பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss