Home FeedBack About us Contact us
ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்த மருந்துக்கு உள்ளது

ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை (சர்க்கரை நோய்) கட்டுப்படுத்தும் ஆற்றல் "மதுமேகச் சூரணம் (தூள்)" " என்ற சித்த மருந்துக்கு உள்ளது என்று ஸ்ரீராமச்சந்திரா இதய மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் எஸ்.தணிகாசலம் கூறினார்.

 ரத்த சர்க்கரை அளவை மதுமேகச் சூரணம் குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புச் சத்தையும் குறைக்கிறது. இதேபோன்று உயர் ரத்த அழுத்த அளவையும் ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புச் சத்து அளவையும் குறைக்கும் ஆற்றல் "வெண்தாமரைச் சூரணம் (தூள்)" " என்ற சித்த மருந்துக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ரூ.5 கோடி நிதியுதவியுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6,000 பேரிடம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ரத்த நாள அடைப்பு குறித்த ஆய்வு முடிவுகளை அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இதய ரத்த நாள அடைப்பு குறித்த ஆய்வுக்காக கடந்த 3 ஆண்டுகளில் 6,000 பேரை, அவர்களின் ஒப்புதலுடன் அவ்வப்போது ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வந்து ஆய்வு செய்யப்பட்டது. ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனைகள், இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறியும் டிரட் மில் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன.

 இந்த ஆயóவில் அதிர்ச்சி தரும் முடிவு என்னவென்றால், 6,000 பேரில் 240 பேர் மட்டுமே சர்க்கரை நோய், இதய நோய் உள்பட எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில்

 71 சதவீதத்தினருக்கு அதிக ரத்த கொழுப்புச் சத்து அளவு பிரச்னையும் 17 பேரில் ஒருவருக்கு அதிக ரத்த சர்க்கரை அளவு (சர்க்கரை நோய்) பிரச்னையும் உள்ளது தெரியவந்துள்ளது.

 இவர்களில் 18 சதவீதம் பேருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் சிறுநீரில் ஆல்புமின் எனும் புரதம் வெளியேறும் பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் சென்னையின் நகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களிடையே உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்தது.

சித்த மருத்துவ முறையில்...: ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உடல் நலப் பிரச்னைகள் இருந்தவர்களுக்கு, அவர்களின் விருப்பம் அறிந்து அலோபதி அல்லது சித்த மருத்துவ முறையில் அந்தந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சர்க்கரை நோய் இருந்தவர்களில் 95 பேர் சித்த மருத்துவ முறையைத் தேர்வு செய்து சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு ஏழு மூலிகைகளை உள்ளடக்கிய மதுமேகச் சூரணம் என்ற சித்த மருந்து அளிக்கப்பட்டது. அதிக ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புச் சத்தையும் குறைக்கும் ஆற்றல் மதுமேகச் சூரணத்துக்கு உள்ளது.

மரபியல் காரணம் இல்லை:
மேலும் இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நகர்ப் பகுதி மக்களின் நோய் பாதிப்புகளுக்கும் கிராமப்புற மக்களின் நோய்ப் பாதிப்புகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.

 கிராம மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களிடையே இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பு அதிகம் இல்லை.

 எனவே இந்தியர்களுக்கு மரபியல் காரணமாகத்தான் இதய ரத்த நாள அடைப்பு பிரச்னை ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச உடல் நல அமைப்புகள், காலம் காலமாகக் கூறுவதை இந்த ஆய்வு முடிவுகள்  பொய்யாக்கியுள்ளன" " என்றார் டாக்டர் எஸ்.தணிகாசலம்.

More News

இலங்கைத் தமிழர் தொடர்பான ராஜிவ் காந்தியின் செயல் கொள்கை குழப்பமானது, ராஜிவ் கொடூரமாக கொல்லப்பட இதுவே காரணம் - இந்திய அரசின் மூத்த உளவுத்துறை அதிகாரி பி.ராமன்
அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளும் தீர்வுகளும்
தாய்மொழியை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.
எதிர்கால வேளாண்மை
ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்த மருந்துக்கு உள்ளது
உழைப்புப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவி!
"பவர் பிளே" அதிரடி!
டிவி பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss