Home FeedBack About us Contact us
"பவர் பிளே" அதிரடி!

ஒருநாள் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கொண்டு வந்த அதிரடி மாற்றங்களில் ஒன்று தான் "பவர் பிளே" ". இந்த மாற்றத்தால் ஒருநாள் போட்டிகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கத்துவங்கியது. "பேட்டிங் பவர்பிளே" " ஓவர்களில் அதிவிரைவாக ரன் சேர்க்கும் போது, போட்டியின் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்த "பவர் பிளே" " குறித்து பார்ப்போம்.
ஆரம்ப காலத்தில் ஒருநாள் போட்டிகளில், விக்கெட் கீப்பர் உட்பட அனைத்து வீரர்களையும் பீல்டிங் செய்ய, எல்லைக் கோட்டுக்கு அருகே கூட நிறுத்தலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பது சிரமமாகி விடும். போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க நினைத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பீல்டிங்கில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது<. அதாவது முதல் 15 ஓவர்களில் 9 பீல்டர்கள் ஆடுகளத்தை சுற்றியுள்ள 27 மீட்டர துர, வட்டத்துக்குள் தான் நிற்க வேண்டும். 2 பீல்டர்கள் இந்த வட்டத்துக்கு வெளியே நிற்கலாம். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் அதிக பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்க முடியும்.

ஜெயசூர்யா எழுச்சி:
முதன் முதலாக 1996ல் நடந்த <உலககோப்பை தொடரில், இந்த "பீல்டிங் கட்டுப்பாடுகள்" " அறிமுகம் செய்யப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யா, கலுவிதரனா இருவரும் (முதல் 15 ஓவர்) அதிரடியாக ரன்குவித்து, ரசிகர்களை மகிழ்வித்தனர். தவிர, இந்த அதிரடி தான் அவர்களுக்கு உலக கோப்பை (1996) பெற்றுத்தந்தது என்றால் அது மிகையல்ல.

"பவர் பிளே" " விதிகள்:
தொடர்ந்து இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க, மேலும் சில மாற்றங்களை ஐ.சி.சி.,கொண்டு வந்தது. இதன் படி "பவர் பிளே" " விதிகள் கொண்டு வரப்பட்டன. இது "பவர் பிளே-1" " (முதல் 10 ஓவர்கள் கட்டாயம்), "பவர் பிளே-2" " (5 ஓவர்கள்), "பவர் பிளே-3" " (5 ஓவர்கள்) என அழைக்கப்பட்டது.

தேர்வு முறை:
பீல்டிங் செய்யும் அணியின் கேப்டன், போட்டியின் தன்மைக்கு ஏற்ப இந்த இரண்டு, மூன்றாவது "பவர் பிளேயை" " தேர்வு செய்து கொள்ளலாம். அப்போது 3 பீல்டர்கள் உள்வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். இந்த விதிமுறை கடந்த 2005 ஜூலை 7ல் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது.

"பேட்டிங் பவர்பிளே" ":
பின் இதிலும் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது மூன்றாவது "பவர் பிளேயை" " தேர்வு செய்யும் உரிமை பேட்டிங் செய்யும் அணிக்கு கொடுக்கப்பட்டது. இது "பேட்டிங் பவர்பிளே" " என்று அழைக்கப்பட்டது. கடந்த 2008ல் நடந்த நியூசிலாந்து-வங்கதேச அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது வரை இது தான் நடைமுறையில் இருந்து வருகிறது.

மந்த நிலை:
இதனால் ஒருநாள் போட்டியில் முதல் 15 ஓவர்கள் மற்றும் பேட்டிங் பவர் பிளேயின் போது விறு விறுப்பு அதிகமாக உள்ளது. இடையில் 20 முதல் 40 வரையிலான ஓவர்களில் மந்த நிலை காணப்படுகிறது. இதையடுத்து இதிலும் மாற்றம் கொண்டுவர ஐ.சி.சி., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போதைய முறை:
தற்போது, முதல் 10 ஓவர்கள் கட்டாய "பவர் பிளே" " முடிந்த பிறகு உடனடியாக பீல்டிங் சைடில் இருந்து இரண்டாவது "பவர் பிளே" " பயன்படுத்துகிறார்கள். பேட்டிங் சைடில், கடைசி 10 ஓவர்களில் தான் பெரும்பாலும் "பவர் பிளே" "யை பயன்படுத்துகின்றனர்.

இதில் ஐ.சி.சி., செய்ய விரும்பும் மாற்றம்:
* முதல் "பவர் பிளே" " முடிந்த பின், அடுத்த "பவர் பிளே" " எடுப்பதில் கட்டாய நிலை கொண்டு வரப்படும். அதாவது குறிப்பிட்ட ஓவர்கள் இடைவெளியில் தான் "பவர் பிளே" " எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், பீல்டிங் செய்யும் அணியினருக்கு ஏற்படும்.
* வழக்கமாக கடைசி 10 ஓவர்களில் எந்த அணியுமே, அடித்து விளையாடுவதால் போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். இதனால் இந்த ஓவர்களில் "பேட்டிங் சைடில்" " இருந்து "பவர் பிளே" " எடுப்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்படும்.
* அநேகமாக பீல்டிங், பேட்டிங் "பவர் பிளே" "க்கள் 20 முதல் 40 ஓவர்கள் இடைவெளியில் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இந்த மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

"டுவென்டி-20" " யில் அறிமுகம்:
சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள "டுவென்டி-20" " போட்டிகளில் இந்த முறை நடைமுறையில் <உள்ளது. இதில் முதல் ஆறு ஓவர்கள் கட்டாய "பவர் பிளே" " <உண்டு. அவ்வளவு தான், மற்றபடி பீல்டிங், பேட்டிங் "பவர் பிளே" " இல்லை.

More News

இலங்கைத் தமிழர் தொடர்பான ராஜிவ் காந்தியின் செயல் கொள்கை குழப்பமானது, ராஜிவ் கொடூரமாக கொல்லப்பட இதுவே காரணம் - இந்திய அரசின் மூத்த உளவுத்துறை அதிகாரி பி.ராமன்
அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளும் தீர்வுகளும்
தாய்மொழியை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.
எதிர்கால வேளாண்மை
ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்த மருந்துக்கு உள்ளது
உழைப்புப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவி!
"பவர் பிளே" அதிரடி!
டிவி பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai